'கூடங்குளத்தில் எரிபொருள் கழிவு மையம் வேண்டாம்'

'கூடங்குளத்தில் எரிபொருள் கழிவு மையம் வேண்டாம்'

2 mins read
231b9b66-2735-4e37-81ec-cf8de498e946
-

சென்னை: கூடங்­கு­ளம் அணு­மின் நிலைய வளா­கத்­தில் பயன்­பாடு முடிந்த அணு எரி­பொ­ருள் கழிவு­களைச் சேக­ரிக்­கும் மையத்தை அமைக்க தமி­ழக அரசு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

தமி­ழக மக்­க­ளின் பாது­காப்பு, சுகா­தா­ரம், நல­னைக் கருத்­தில் கொண்டு இந்­ந­ட­வ­டிக்­கையை மத்­திய அரசு கைவிட வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பிர­த­மர் மோடிக்கு கடிதம் எழுதி உள்­ளார் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

இது தொடர்­பாக பொது மக்­க­ளி­டையே உள்ள கவ­லையை பிர­த­ம­ரின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"பயன்­பாடு முடிந்த அணு எரி­பொ­ருள் கழி­வு­களை, அணு­மின் நிலைய வளா­கத்­திற்­குள், அணு உலைக்கு அப்­பால் சேமித்து வைப்­ப­தால் ஏற்­படும் அபா­யங்­கள், ஆபத்­து­கள் தொடர்­பான சாத்­தி­யக் கூறு­கள் குறித்து பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள் உட்­பட தமி­ழக மக்­க­ளின் ஆழ்ந்த கவ­லை­யை­யும் அச்­சத்­தை­யும் பகிர்ந்துகொள்­கி­றோம்.

"சுற்­றுச்­சூ­ழல், அத்­த­கைய ஆலைப் பகு­தி­களில் வசிக்­கும் மக்­க­ளுக்கு இது பேர­ழி­வினை ஏற்­படுத்­திட வழி­வ­குத்­தி­டும். மேலும், அப்­ப­கு­தி­யில் உள்ள மக்­கள் தங்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­பு­கள் குறித்து அச்­சம் கொண்­டுள்­ள­னர்.

"அதன் கார­ண­மாக மத்­திய அர­சின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து போராடி வரு­கின்­ற­னர்," என்று முதல்­வர் ஸ்டா­லின் கூறி­உள்­ளார்.

பயன்­பாடு முடிந்த அணு எரி­பொ­ருள் கழி­வு­களை மீண்­டும் ரஷ்­யா­வுக்கே கொண்டு செல்ல நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­லாம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அது சாத்தி­யப்­ப­டா­வி­டில், மக்­கள் வசிக்­காத, சூழ­லி­யல் பாதிப்பு இல்­லாத பகு­தி­யில், நிலத்­தடி ஆழ்­நிலை கிடங்கு அமைத்து, பயன்­பாடு முடிந்த அணு எரி­பொ­ருள் கழி­வு­களை நிரந்­த­ர­மாக சேமித்து வைக்­க­லாம் என தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் உள்ள எட்டு கோடி மக்­க­ளின் சார்­பாக இந்த வேண்டு­கோளை தாம் முன்­வைப்­ப­தாக முதல்­வர் தமது கடி­தத்­தில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.