கலைப்பொருள் அங்காடியில் பதுக்கிய சிலைகள் பறிமுதல்

கலைப்பொருள் அங்காடியில் பதுக்கிய சிலைகள் பறிமுதல்

1 mins read
80b94abb-37af-44e0-9316-50995fdc94b0
-

சென்னை: கலைப்­பொ­ருள்­கள் விற்­கும் அங்­கா­டி­யில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த பல கோடி ரூபாய் மதிப்­புள்ள சிலை­களை (படம்) சென்னை காவல்­துறை கைப்­பற்றி உள்­ளது.

உலோக நட­ரா­ஜர், கண்­ணன் சிலை­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் பௌத்த மத மந்­தி­ரங்­கள் அடங்­கிய பேழை­களும் கிடைத்­துள்­ளன என்­றும் சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு காவ­லர்­கள் தெரி­வித்­த­னர்.

அக்­கு­றிப்­பிட்ட அங்­கா­டியில் தொன்­மை­யான கோவில் சிலை­கள் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கிடைத்த தக­வலை அடுத்து காவல்­து­றை­யி­னர் அங்கு சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அப்­போது இரண்டு அடி உய­ரம் கொண்ட திரு­வாட்­சி­யு­டன் கூடிய நட­ரா­ஜர் சிலை உள்­ளிட்ட பல சிலை­கள் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

இது­கு­றித்து அங்­காடி நிர்­வா­கி­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. எனி­னும் அச்­சி­லை­கள் எங்­கி­ருந்து அனுப்­பப்­பட்­டன, அவற்றை அனுப்­பி­யது யார் என்­பன போன்ற விவ­ரங்­கள் அவர்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

மேலும், சட்­ட­பூர்­வ­மான ஆவ­ணங்­களும் இல்­லா­த­தால் அச்­சி­லை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. இந்­நி­லை­யில், அவை அனைத்­துமே பல்­வேறு இடங்­களில் இருந்து திரு­டப்­பட்­டவை என்­பது உறு­தி­யாகி உள்­ளது.

இவற்­றின் தொன்மை, மதிப்பு குறித்து வல்­லு­நர்­க­ளி­டம் கலந்­தா­லோ­சிக்­கப்­படும் என்­றும் எந்த கோவில்­களில் இருந்து திரு­டப்­பட்­டவை என்­பது குறித்து விசா­ரிக்­கப்­படும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். முதற்­கட்ட விசா­ர­ணை­யின் மூலம் அச்­சி­லை­கள் பல­கோடி ரூபாய் மதிப்­புள்­ளவை எனத் தெரி­ய­வந்­துள்­ளது.