மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

1 mins read
2f2939db-b4a7-40f9-b073-7463d9435087
-

ராமேசுவரம்: தமி­ழக மீன­வர்­கள் மீது இலங்கை கடற்­கொள்­ளை­யர்­கள் மீண்­டும் தாக்­கு­தல் நடத்தி உள்­ள­னர்.

இது­கு­றித்து தமி­ழக மீன்­வ­ளத்­துறை அலு­வ­ல­ரி­ட­மும், கட­லோ­ரக் காவல்­படை குழு­மத்­தி­ட­மும் மீன­வர்­கள் தரப்­பில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் வேதா­ரண்­யம் பகு­தி­யைச் சேர்ந்த நான்கு மீன­வர்­கள் மீன்­பி­டிக்க கட­லுக்­குச் சென்­றி­ருந்­த­னர். கோடி­யக்­க­ரை கடற்­ப­கு­தி­யில், அவர்­கள் மீன் பிடித்­துக் கொண்­டி­ருந்­த­போது, திடீ­ரென இலங்கை கடற்­கொள்­ளை­யர்­கள் அங்கு வந்­த­னர்.

பின்­னர் தமி­ழக மீன­வர்­களை கத்­தி­யைக் காட்டி மிரட்­டிய கொள்­ளை­யர்­கள் மீன் வலை­கள், பெட்­ரோல், கைபே­சி­கள், ஜிபி­எஸ் கருவி­கள் என ரூ.50,000 மதிப்புள்ள பொருள்களைக் கொள்­ளை­ய­டித்துச் சென்­ற­னர்.