சென்னை: வாக்குச்சாவடியில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதற்காகவும் வரிசையில் முறைப்படி நிற்காமல் வாக்கு அளித்ததற்காகவும் விஜய் அங்கிருந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய் தன் ஆதரவாளர்களை நேரடியாக களம் இறக்கியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த வாக்களிப்பின்போது சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களிக்க வந்திருந்தார் விஜய். சட்டமன்றத் தேர்தலின்போது மிதிவண்டியில் வந்த விஜய், இம்முறை ரசிகர்கள் புடைசூழ காரில் வந்திருந்தார். விஜய்யின் வரவால், வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகரித்ததால் வரிசையில் நிற்காமல் நேராகச் சென்று வாக்க ளித்தார். அதற்காக, அவர் வரிசையில் நின்றிருந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

