காவல்துறை அதிகாரியின் மனித நேயத்துக்குப் பாராட்டு

காவல்துறை அதிகாரியின் மனித நேயத்துக்குப் பாராட்டு

1 mins read
dbea49f3-c949-49d8-8988-79d57a4a9078
வடிவேலை அழைத்துச் சென்ற கண்ணன். படம்: ஊடகம் -

சிவ­கங்கை: வாக்­க­ளிப்­ப­தற்­காக அழைத்து வந்து தங்­க­ளுக்­கான தேவை முடிந்­த­பின் பாதியிேலயே கழட்டி விட்­டுச்சென்ற ஒரு மாற்­றுத் ­தி­ற­னா­ளியை, பணி­யில் இருந்த காவல் அதி­காரி ஒருவர் தன் வாக­னத்­தில் அழைத்­துச்சென்று அவரது வீட்­டில் இறக்கிவிட்­டு வந்துள்ளார். இச்செயலுக்குச் சமூக ஆர்வலர் களும் மக்களும் பாராட்டுகளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

சிவ­கங்கை மாவட்­டம், சிங்­கம்­பு­ணரியில் உள்­ளாட்­சித் தேர்­தல் பாது­காப்புப் பணிக்­காக சிறப்புத் துணை ஆய்­வா­ளர் கண்­ணன் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், வடி­வேல் என்ற மாற்­றுத்­தி­ற­னாளியை அழைத்து வந்திருந்த வாக்­குச்­சாவடி முக­வர் ஒருவர், வாக்­க­ளித்து விட்டு வந்த வடி­வே­லுவை திரும்ப அவரது வீட்டுக்கு அழைத்துச்செல்லாமல் அங்கேயே விட்டுவிட்டார்.

இதனால், தனது வீட்­டுக்குத் திரும்பமுடியாமல் மணிக் கணக்கில் தவித்த வடிவேலை மற்­றொரு காவ­லரை தனது பாது­காப்புப் பணிக்கு அமர்த்தி­விட்டு தனது இரு­சக்­கர வாக­னத்­தில் அழைத்­துச் சென்று அவ ரது வீட்­டில் விட்டார் கண்ணன்.