தர்மராஜா கோயில் குடமுழுக்கு விழாவில் மலர் தூவிய ஹெலிகாப்டர்

தர்மராஜா கோயில் குடமுழுக்கு விழாவில் மலர் தூவிய ஹெலிகாப்டர்

1 mins read
f3888fb0-a673-4a64-83ea-18f84ff6e1c3
கடந்த சனியன்று நடைபெற்ற குடமுழுக்கின்போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்­தூ­வி­யதை மக்கள் கண் இமைக்­கா­மல் பார்த்து ரசித்­த­னர். படம்: ஊடகம் -

ஒசூர்: ஓசூர் அருகே உள்ள டி.கொத்­தப்­பள்ளி கிரா­மத்­தில் பழமைவாய்ந்த தர்­ம­ராஜா கோயில் உள்ளது. இக்கோயிலின் குடமுழுக்கு விழா­வில் ஹெலி­காப்­டர் மூலம் மலர்­கள் தூவி வழி­பாடு நடத்தியுள்ளனர்.

இந்தக் கோயி­லில் கடந்த சில ஆண்­டு­க­ளாகவே மூன்றரை கோடி செல­வில் கோயில் கோபு­ரங்­கள் உள்­ளிட்ட கட்­டு­மானப் பணி­கள் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மஹா குடமுழுக்கு நடை­பெற்­றுள்ளது.

இதையடுத்து, பெங்­க­ளூ­ரு­வில் இருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட ஹெலி­காப்­ட­ரில் இருந்து மலர்­கள் கோயி­லின் கோபுரக் கல­சங்­கள் மீது தூவப்­பட்­டன.

ஹெலி­காப்­டர் கோயிலைச் சுற்றி பல முறை வட்­டமடித்து மலர்­களைக் கோபு­ரத்­தின் மேல் தூவின. இந்த குடமுழுக்கு விழா­வில் டி.கொத்­தப்­பள்ளி உள்­ளிட்ட சுற்­றுப்­புற கிரா­மங்­களைச் சேர்ந்த ஆயி­ரக்­கணக்­கான ­மக்­கள் கலந்துகொண்டு சுவா­மியை வழி­பட்டுச் சென்­ற­னர்.