சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து ஒேர குழுவாகச் சென்னை வந்த ஐந்து பயணிகளைச் சோதித்த போது, அவர்களது உள்ளாடைகளில் 24 தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 1.5 கிலோ. இதையடுத்து அவர்கள் ஐவரையும் கைது செய்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து சுங்கத் துறை அதி காரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது சம்பவம்:
இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தை ஊழியர்கள் சுத்தப்படுத்திய போது, ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு தங்கக் கட்டிகள் கொண்ட ஒரு பொட்டலம் கண்டு பிடிக்கப்பட்டது. அவை 700 கிராம் எடை இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தைக் கடத்தி வந்தவர்களைத் தேடி வருகின்றனர்.
மூன்றாவது சம்பவம்:
இதனிடையே, சென்னை யில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் 46 லட்சம் வெளிநாட்டுப் பணத்தைக் கடத்தி செல்ல இருந்த மகராஷ்டிரா மாநிலத்தைச் சோ்ந்த ஹரீஸ் ஹங்வாணி, 52, என்ற பயணியைக் கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

