செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
915454b2-5d4d-4995-822c-4fd01ab377f4
-

சக்கரம் கழன்று ஓடிய பேருந்து: உயிர் பிழைத்த 47 பயணிகள்

பல்லடம்: பல்லடத்தில் அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் சாலையில் கழன்று ஓடியதில் 47 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்து (TN38-N3048) 47 பயணிகளுடன் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

பல்லடம், கள்ளக்கிணறு பகுதியில் வந்துகொண்டிருந்த பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென்று கழன்று, அரை கிலோ மீட்டர் தூரம் சாலையில் உருண்டோடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் காமராஜ், உடனடியாக 'பிரேக்' போட்டு சாமர்த்தியமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். இதனிடையே, கழன்று ஓடிய முன்சக்கரம் இரு சக்கர வாகனம் ஒன்றில் மோதியதில் அந்த வாகனம் சேதமடைந்தது.

'அதிர்ஷ்டம் தரும் அதிசயக் கிணறு'

திருநெல்வேலி: அதிசயக் கிணற்றை அறிவியல்பூர்வமாக பயன்படுத்தினால், திசையன்விளை வட்டாரத்தை வளம் கொழிக்கச் செய்யலாம் என சென்னை தகவல் தொழில் நுட்பக் குழுவினர் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ளது ஆயன்குளம். 2021 வடகிழக்குப் பருவ மழை, வெள்ளத்தின்போது சுற்று வட்டாரப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியபோதும், இங்குள்ள ஒரு திறந்த வெளிக் கிணறு மட்டும் நிரம்பவில்லை. பல வாரங்கள் ஆகியும் கிணறு நிரம்பாததால் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் வேண்டுகோளின்படி நடத்தப்பட்ட ஆய்வில், இந்த கிணற்றின் வாயிலாக மற்ற கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதைக் கண்டனர். தகவல் தொழில்நுட்பக் குழுவினர் அரசுக்கு அளித்துள்ள ஆய்வறிக்கையில், "அதிவேக மறுகூட்டல் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தினால் திசையன்விளையை வளம் கொழிக்கச் செய்யமுடியும். வெள்ளப்பெருக்கு காலங்களில் கிணறுகளில் நிலத்தடி நீரைச் சேகரித்து, வறட்சி காலங்களில் மீட்ெடடுத்துப் பயன்படுத்த முடியும்," எனக் குழுவினர் கூறியுள்ளனர்.