ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஏழு பேர் கைது

ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஏழு பேர் கைது

1 mins read
034f0fd5-54c7-4b41-870a-e1f92cdf5f6d
காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளின் உலகச் சந்தை மதிப்பு ரூ.20 கோடி என்று கூறப்படுகிறது. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

தூத்­துக்­குடி: இலங்­கைக்கு ரூ.20 கோடி மதிப்­பி­லான போதைப் பொரு­ளைக் கடத்­திச் சென்­ற­போது காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் பிடி யில் எழு­வர் சிக்­கி­னர்.

தூத்­துக்­குடி மாவட்­டம், விளாத்­தி­கு­ளம் அரு­கே­யுள்ள வேம்­பார் கடற்­க­ரைப் பகு­தி­யில் இருந்து இலங்­கைக்கு நாட்­டுப்­ப­டகு மூலம் போதைப்­பொ­ருள் கடத்­தப்­பட உள்­ள­தாக தூத்­துக்­குடி கியூ பிரிவு தனிப்­படை காவல் துறை அதி­கா­ரி­க­ளுக்குத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, சந்­தே­கத்­திற்கு இட­மாக ஒரு நாட்­டுப்­ப­டகு விரை­வாக கிளம்­பு­வ­தைக் காவல் துறை­யி­னர் பார்த்­த­னர். காவல்துறை­யி­ன­ரைக் கண்­ட­தும் அந்த நாட்­டுப்­ப­டகு அதி­வே­க­மாக கட­லுக்­குச் செலுத்த தொடங்கி உள்­ளது.

இத­னால், அதிர்ச்­சி­ய­டைந்த காவல்­து­றை­யி­னர் அவர்­களை மடக்­கிப் பிடிக்க விசைப்­ப­டகு மூல­மாக நாட்­டுப்­ப­டகை துரத்தியுள்­ளனர். அத்­து­டன், ஜிபி­எஸ் கருவி மூல­மா­க­வும் நாட்­டுப்­ப­டகு இருக்­கும் இடத்தைக் கண்­ட­றிந்து அதனை சுற்றி வளைத்­துள்ளனர்.

படகை பரி­சோ­தித்­த­தில் 10 கிலோ கிரிஸ்­டல் மெத்­தாம்­பேட்ட மைன் என்ற போதைப்­பொ­ருள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. மேலும், அவற்றை இலங்­கைக்கு கடத்­திச் சென்­ற­தும் தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, கீழ­வைப்­பார், சிப்பி­கு­ளம் உள்­ளிட்ட பகு­தி­யைச் சேர்ந்த இரு­த­ய­வாஸ், கிங்­கப்­பன், சிலுவை, அஸ்­வின், வின்ஸ்­டன், கபி­லன், சைமன் ஆகி­யோரை காவல்துறை ஆய்வாளர் விஜ­யா­அனிதா தலை­மை­யி­லான தனிப்­படை­யி­னர் கைது செய்­த­னர். அவர்­க­ளி­டம் இருந்து 10 கிலோ கிரிஸ்­டல் மெத்­தாம்­பேட்­ட­மைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறி­மு­தல் செய்­தனர்.