சென்னை: சென்னை ஓடைக்குப்பம் வார்டு பகுதியில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும் திமுக சார்பில் கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவின்போது கதிர் என்ற திமுக பிரமுகரும் கயல்விழியின் கணவர் ஜெயக்குமாரும் அடியாட்களுடன் வந்து வாக்கு இயந்திரத்தை உடைத்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

