52 நாள்களுக்குப் பிறகு 1,000க்கு கீழ் குறைந்தது தொற்று பாதிப்பு

52 நாள்களுக்குப் பிறகு 1,000க்கு கீழ் குறைந்தது தொற்று பாதிப்பு

1 mins read
41f0aefa-3b92-417d-917e-84b7c1448523
-

சென்னை: தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் தினசரி கொரோனா தொற்று 1,000க்கும் கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு தொற்று உறுதியானது.

52 நாள்களுக்குப் பிறகு மாநிலத்தில் அன்றாட பாதிப்பு 1,000க்கு கீழ் பதிவாகியது. அதிகபட்சமாக சென்னையில் 222 பேருக்கும் கோவையில் 136 பேருக்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 100க்கு கீழும் 16 மாவட்டங்களில் பத்துக்கும் கீழும் பாதிப்பு பதிவாகி உள்ளது.

இத்தொற்றால் நேற்று ஒரே நாளில் மூவர் உயிரிழந்தனர். 3,172 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கிருமிப்பரவல் குறைந்தாலும் அலட்சியம் காட்டாமல் பொதுமக்கள் நோய்த் தடுப்பு விதிமுறை களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்கள், மருத்துவ நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது.