உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மண்பாண்டக் கலைஞரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ரஞ்சித் என்ற 21 வயது இளைஞர், ரஜினியின் சிலையைக் களிமண்ணில் வடித்துள்ளார்.
அவரது கைவண்ணம் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிவருவதை அடுத்து, நடிகர் ரஜினி குரல் பதிவு மூலம் ரஞ்சித்துக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
"வணக்கம் ரஞ்சித், நீங்கள் செய்த என்னோட அருமையான பொம்மையைப் பார்த்தேன். என்ன கைக் கலை. நீங்கள் ரொம்ப ரொம்ப திறமைசாலி. உங்களுக்காக ஆண்டவனிடம் வேண்டு கிறேன். நிச்சயமாக உங்களை ஒரு நாள் சந்திக்கிறேன் கண்ணா," என குரல் பதிவில் பேசி பகிர்ந்துள்ளார்.

