வெற்றிக்குப் பின் கட்சி மாறிய வேட்பாளர்கள்

வெற்றிக்குப் பின் கட்சி மாறிய வேட்பாளர்கள்

2 mins read
fccdf72d-b5fd-4886-88f5-a7901ee205e2
-

வேலூர்: மதுரை மாவட்­டம் மேலூர் நக­ராட்சி ஒன்­ப­தா­வது வார்­டில் அதி­முக சார்­பில் வெற்றி பெற்ற அருண் சுந்­தர பிரபு, அமைச்­சர் மூர்த்தி முன்­னி­லை­யில் தன்னை திமு­க­வில் இணைத்­துக்கொண்­டார்.

வெற்றி பெற்ற சில நிமி­டங்­களில் அதி­மு­க­வைச் சேர்ந்த அருண் சுந்­தர பிரபு திமு­க­வில் இணைந்தது மேலூர் பகுதி அதி­மு­க­வி­னரை அதிர்ச்­சி­யில் மூழ்­க­டித்­துள்­ளது.

ஆவடி மாந­க­ராட்சி 14வது வார்­டில் அதி­முக சார்­பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற வேட்­பா­ளர் ராஜே­ஷும் நேற்று திமு­க­வில் இணைந்­தார். தமி­ழக பால்­வ­ளத்­துறை அமைச்­சர் நாசரை நேரில் சந்­தித்து அவர் திமு­க­வில் இணைந்­தார்.

இதற்­கி­டையே கிருஷ்­ண­கிரி நக­ராட்­சியை திமுக கைப்­பற்­றி­ய­தை­ய­டுத்து மூன்று சுயேட்சை வேட்­பா­ளர்­கள் திமு­க­வில் இணைந்­த­னர்.

கிருஷ்­ண­கிரி நக­ராட்­சி­யில் உள்ள 33 வார்­டு­களில் 23ல் வார்­டு­களில் வெற்­றி­பெற்று திமுக நக­ராட்­சியை கைபற்­றி­யுள்­ளது.

ஓரத்தநாடு பேரூராட்சியைக் கைப்பற்றிய அமமுக

தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் உள்ள ஒரத்­த­நாடு பேரூ­ராட்­சியை அம்மா மக்­கள் முன்­னேற்­றக்­க­ழ­கம் கைப்­பற்­றி­யுள்­ளது.

அங்கு மொத்­த­முள்ள 15 வார்­டு­களில் அம­முக ஒன்­பது வார்­டு­க­ளைக் கைப்­பற்றி வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளது.

இதே­போல் திருச்சி மாந­க­ராட்சி­யில் 47வது வார்­டை­யும் அம­முக கைப்­பற்­றி­யது. அந்­தக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன் தேர்­தல் பிர­சா­ரம் மேற்­கொள்­ள­வில்லை. ஒற்றை அறிக்­கை­யோடு ஒதுங்­கிக்கொண்­டார். இந்­நி­லை­யில் ஒரு பேரூ­ராட்­சி­யில் வெற்றி பெற்­றது அக்­கட்­சித் தொண்­டர்­க­ளுக்கு உற்­சா­கம் அளித்­துள்­ளது.

குலுக்கலில் வென்ற சுயேச்சை

நாமக்­கல் மாவட்­டம் திருச்­செங்­கோடு நக­ராட்­சி­யில் குலுக்­கல் மூலம் ஒரு சுயேச்சை வேட்­பா­ளர் வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

அங்கு மொத்­தம் 33 வார்­டு­கள் உள்­ளன. இதில் 13வது வார்­டில் போட்­டி­யிட்ட சினேகா என்ற சுயேச்­சை­யும் திமுக வேட்­பா­ளர் ரேவ­தி­யும் வாக்கு எண்­ணிக்­கை­யின் முடி­வில் 696 வாக்­கு­கள் பெற்­றி­ருந்­த­னர்.

இதை­ய­டுத்து தேர்­தல் அலு­வ­லர் இரு­வ­ரது பெய­ரை­யும் தனித்­த­னியே ஒரு சீட்­டில் எழுதி குலுக்­கல் முறை­யில் வெற்­றி­யா­ளரை தேர்வு செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தார். அதன்­படி நடத்­தப்­பட்ட குலுக்­க­லில் தண்­ணீர் குழாய் சின்­னத்­தில் போட்­டி­யிட்ட சினேகா வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.