தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் முதல் நிலை சதுரங்க வீரரை வீழ்த்தி தமிழக மாணவர் சாதனை

1 mins read
098c4c66-a0bb-4c34-928b-c1faa5feee23
-

சென்னை: உலக சது­ரங்க சாம்­பி­யன் மேக்­னஸ் கார்ல்­சனை வீழ்த்தி சாதனை படைத்­துள்­ளார் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 16 வய­தான பிரக்­ஞா­னந்தா.

அவ­ருக்கு தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், கிரிக்­கெட் வீரர் சச்­சின் டெண்­டுல்­கர் பலர் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.

'ஏர்­திங்ஸ் மாஸ்­டர்ஸ் ரேபிட்' சது­ரங்­கப் போட்டி இணை­யம் வழி நடை­பெற்று வரு­கிறது. இதில் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 16 வீரர்­கள் பங்­கேற்­றுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், உல­கின் முதல்­நிலை வீர­ரான மேக்­னஸ் கார்ல்­சனை எதிர்­கொண்­டார் பிரக்­ஞா­னந்தா. இந்­தப் போட்­டி­யில் 39வது நகர்த்­த­லின்­போது அவர் வெற்றி பெற்­றார். இதை­ய­டுத்து அவ­ருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

இந்த வெற்­றி­யின் மூலம் ஒட்­டு­மொத்த உல­கத்­தை­யும் பிரக்­ஞா­னந்தா திகைப்­பி­லும் வியப்­பி­லும் ஆழ்த்தி உள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பாராட்டி உள்­ளார்.

"தமிழ்­நாட்­டைச் சேர்ந்த 16 வயது பிரக்­ஞா­னந்­தாக்கு எனது மன­மார்ந்த பாராட்­டு­கள். மென்­மே­லும் வெற்­றி­கள் குவி­யட்­டும்," என முதல்­வர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

பிரக்­ஞா­னந்­தா­வின் வெற்றி ஒரு மாயா­ஜா­லம் போல் இருப்­ப­தாக சச்­சின் டெண்­டுல்­கள் கூறி­யுள்­ளார்.