விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

1 mins read
1bc23dae-e8e8-4489-8563-62afe8c1248a
-

புதுக்கோட்டை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர் புதுக்கோட்டை நகராட்சியின் நான்காவது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.

அந்த வார்டில் திமுக ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தில் வேட்பாளரான பர்வேஸ், 282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அவர் திமுகவில் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. எனினும், அவரது தரப்பு இதை மறுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் மேலும் சில இடங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் நேற்று மாலை வரை வெளியாகவில்லை.

இந்நிலையில், தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை விஜய் ஓரிரு நாள்களில் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சின்னம். படம்: ஊடகம்