திருச்சி: திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.
இங்குள்ள ஏழாவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நித்யாவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கர்ணனும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்ணன் 234 வாக்குகள் பெற்ற நிலையில், நித்யா 234 வாக்குகள் பெற்றார். ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் நித்யா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியின் 11ஆவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் 1 வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
இந்தவார்டில் மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 162 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் உமாசங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வம் 35 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் நாகமையன் 42 வாக்குகளும் பெற்றனர். நரேந்திரனுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது.

