வேலூர்: வேலூரில் திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளாரா். அங்குள்ள 37வது வார்டில் திமுக சார்பில் திருநங்கையான கங்கா போட்டியிட்டார்.
நேற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவருக்கு 2,131 வாக்குகள் கிடைத்திருந்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரியாவுக்கு 2116 வாக்குகள் கிடைத்தன. இதனால் 15 வாக்குகள் வித்தியாசத்தில் திருநங்கை கங்கா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருநங்கைகள் அவரை கட்டியணைத்து வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.

