திமுகவில் இணையும் வெற்றி பெற்ற சுயேச்சைகள்: பின்னணி காரணம்

திமுகவில் இணையும் வெற்றி பெற்ற சுயேச்சைகள்: பின்னணி காரணம்

2 mins read
a5dd1816-d1bf-4608-97f2-ce0613d84393
-

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் வெற்­றி­பெற்ற மற்ற கட்சி­களைச் சேர்ந்த சிலர் திமுகவில் இணைந்து வரு­கின்­ற­னர். குறிப்­பாக, சுயேச்சை வேட்­பா­ளர்­கள் பலர் திமுகவில் இணைவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று முன்­தி­னம் தேர்­தல் முடிவு­கள் வெளி­யான சில நிமி­டங்­க­ளி­லேயே மது­ரை­யைச் சேர்ந்த அருண்­சுந்­தர பிரபு என்­ப­வர் திமு­க­வில் தன்னை இணைத்­துக் கொண்­டார்.

இத­னால் அதி­முக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்த நிலை­யில், சிவ­கங்கை நக­ராட்­சி­யில் வெற்­றி­பெற்ற மூன்று சுயேச்­சை­கள், ஒரு அதி­முக வேட்­பா­ளர் உள்­ளிட்ட நால்வர் வெற்­றிக்­குப் பின்­னர் திமு­க­வில் இணைந்­துள்­ள­னர்.

சிவ­கங்கை நக­ராட்­சிக்­குட்பட்ட 4வது வார்­டில் வெற்­றி­பெற்ற சுயேச்சை வேட்­பா­ளர் சேது நாச்சி­யார், நேற்று அமைச்­சர் பெரி­ய­கருப்பன் முன்­னி­லை­யில் திமு­க­வில் இணைந்­தார்.

இதே­போல், 19வது வார்­டில் வெற்­ற­பெற்ற பாக்­கி­ய­லட்­சுமி, 23வது வார்­டில் வெற்­றி­பெற்ற ராஜ­பாண்டி ஆகிய இரு சுயேச்சை வேட்­பா­ளர்­களும் திமு­க­வி­ன­ரு­டன் நடத்­திய பேச்­சு­வார்த்­தை்­க­குப் பிறகு அக்­கட்சி­யில் இணைந்­த­னர்.

22வது வார்­டில் வெற்­றி­பெற்ற அதி­முக வேட்­பா­ளர் சர­வ­ண­னும் திமு­க­வில் இணை­வ­தாக அறி­வித்­தது அதி­முக தலை­மைக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது.

சுயேச்­சை­யாக நின்று தேர்தலில் வெற்றி பெற்­றா­லும், தனித்து நின்று வார்டு மக்­க­ளின் பிரச்­சினை­களுக்குத் தீர்வு காண முயற்சி செய்­வ­தை­விட ஆளுங்­கட்­சி­யில் இணைந்து செயல்­ப­டு­வது நல்­லது என்­பதே பல­ரது கருத்­தாக உள்­ளது.

மேலும் கட்சி ஆத­ர­வின்றி வெற்றி­ பெற்­ற­வர்­கள் ஏதே­னும் அரசி­யல் கட்­சி­யில் இணை­யும்­போது அவர்­க­ளுக்கு கூடு­தல் மரி­யாதை கிடைப்­பது வழக்­கம்.

தவிர உள்­ளாட்­சிப் பிர­தி­நிதி என்ப­து­டன் கட்­சிப் பதவி கிடைக்கவும் வாய்ப்­புள்­ளது.

இது தங்­க­ளின் அர­சி­யல் எதிர்­கா­லத்­துக்கு நல்­லது என வெற்­றி­பெற்ற சுயேச்­சை­களில் சிலர் நினைக்­கின்­ற­னர் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.