கணவன், மனைவி, மாமியார், மருமகள் வெற்றி

கணவன், மனைவி, மாமியார், மருமகள் வெற்றி

1 mins read
fdde23d0-70d3-416b-b867-702437a980d1
-

சிவகங்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்புவனம் பகுதியில் கணவரும் மனைவியும் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் விருதுநகரில் மாமியாரும் மருமகளும் இவ்வாறு வெற்றிக்கனியைப் பறித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் 9வது வார்டில் களமிறங்கினார். அவரது மனைவியும் திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக செயலாள ருமான வசந்தி சேங்கை மாறன் 8வது வார்டில் போட்டியிட்டார்.

இம்முறை இருவருமே கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டில் மருமகள் சித்தேஸ்வரியும் 27வது வார்டில் மாமியார் பேபியும் போட்டியிட்டனர்.

இருவருமே தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி கண்டுள்ளனர்.

இதேபோல் மாநிலத்தின் வேறு சில பகுதிகளில் இரு சகோதரர்கள், கல்லூரி மாணவி ஆகியோர் வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.