அதிமுக தோல்விக்கான பின்னணிக் காரணங்கள்

அதிமுக தோல்விக்கான பின்னணிக் காரணங்கள்

1 mins read
2a447f04-13dc-44ff-ac2c-2276da560756
-

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் அதி­முக படு­தோல்வி கண்­டுள்ள நிலை­யில், இதற்­கான கார­ணங்­களை ஆராய்ந்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என அக்­கட்­சி­யி­னர் தலை­மை­யி­டம் வலி­யு­றுத்­தத் தொடங்கி உள்­ள­னர்.

சசி­கலா விவ­கா­ரம், ஒற்­றைத் தலைமை கோரிக்கை, உட்­கட்­சிப் பூசல்­கள் ஆகி­ய­வை­தான் கடந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் அதி­முக தோல்வி அடைய கார­ணம் என்று முன்பு கூறப்­பட்­டது.

எனி­னும், இது தொடர்­பாக கட்­சித் தலைமை எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ள­வில்லை என்­றும் அதன் எதி­ரொ­லி­யா­கவே நடப்பு தேர்­த­லில் படு­தோல்­வியைச் சந்­திக்க நேர்ந்­துள்­ளது என்­றும் பல நிர்­வா­கி­கள் கரு­து­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு அதி­முக ஆட்­சிக் காலத்­தி­லேயே நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்த வேண்­டும் என கட்சி நிர்­வா­கி­கள் பலர் அன்­றைய முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­ட­மும் துணை முதல்­வர் ஓ.பன்­னீர்செல்­வத்­தி­ட­மும் வலி­யு­றுத்­தி­ய­தா­க­வும் அதை கட்­சித் தலைமை கண்­டு­கொள்­ள­வில்லை என்­றும் தமி­ழக ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

அப்­போதே தேர்­தல் நடந்­தி­ருந்­தால் இவ்­வ­ளவு மோச­மான தோல்வி ஏற்­பட்­டி­ருக்­காது என்று அந்­நிர்­வா­கி­கள் கூறி­ய­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாஜ­க­வு­டன் கூட்­டணி அமைத்­த­தும் தோல்­விக்­கான ஒரு கார­ணம் என முக்­கிய நிர்­வா­கி­கள் சிலர் கூறு­வ­தா­கத் தெரி­கிறது.

மொத்­தத்­தில் தேர்­தல் கூட்­டணி, அர­சி­யல் உறவு, ஒற்­றைத் தலைமை, சசி­கலா விவ­கா­ரம் உள்­ளிட்ட பிரச்­சி­னைக்­கு­ரிய விவ­கா­ரங்­கள் தொடர்­பில் கட்­சித் தலைமை உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­த­து­தான் இன்று அதி­மு­க­வின் பரி­தாப நிலைக்­குக் கார­ணம் என்று மூத்த நிர்­வா­கி­கள் கரு­து­வ­தாக தமி­ழக ஊட­கம் கூறியுள்ளது.