புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.
அங்கு வாக்குரிமை பெற்றிருந்த வனிதா என்ற பெண்மணி அழுதுகொண்டே ஆட்டோவில் வந்து வாக்களித்தார்.
அவருடன் வந்தவர்களை விசாரித்தபோது, அந்தப் பெண்மணியின் கணவரான சங்கர் என்பவர் நேற்றுக் காலை இறந்துவிட்டதாகவும் அவருடைய சடலம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வனிதா வாக்களிக்க வந்ததாகவும் தெரியவந்தது.
வனிதாவின் கணவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறினர்.

