சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த பழனிசாமி

சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த பழனிசாமி

1 mins read
8392eb8b-31a6-44ec-87b9-e5aa48f0efab
-

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்சி தேர்­த­லின்­போது திமுக பிர­மு­கரை தாக்­கி­ய­தன் தொடர்­பில் கைது­செய்­யப்­பட்ட முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மா­ரின் பிணை மனு மீதான விசா­ரணை இன்று நடக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. ஜெயக்­கு­மார் மார்ச் 7ஆம் தேதி வரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்­கப்­பட்டுள்ளார்.

இந்­நி­லை­யில், புழல் சிறை­யில் அடைக்­கப்­பட்டு இருக்­கும் ஜெயக்­கு­மாரை நேற்று அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழனி­சா­மி­யும் இதர கட்­சிப் பிர­மு­கர்­களும் சந்­தித்­த­னர்.

ஜெயக்­கு­மா­ருக்கு பிணை வழங்க அர­சாங்­கம் வேண்­டு­மென்றே எதிர்ப்பு தெரி­வித்து வரு­வ­தாக அந்­தச் சந்­திப்­புக்கு பிறகு பழ­னி­சாமி கூறி­னார்.