கீழடி: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தைப் பார்வையிட நேற்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தற்காலிகமாக அந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு இருக்கிறது.
அகழாய்வுக் குழிகளில் உள்ள பானைகள், உறைகிணறுகள், மண் கிண்ணங்களை பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறையினர் கூறினர்.

