மார்ச் 4ம் தேதி: மேயர்களைத் தேர்வு செய்ய மறைமுக தேர்தல்

மார்ச் 4ம் தேதி: மேயர்களைத் தேர்வு செய்ய மறைமுக தேர்தல்

1 mins read
6e4742a3-237b-4c90-b13a-b7112ada8ae4
-

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.

எதிர்வரும் மார்ச் 4ம் தேதி இந்தத் தேர்தல் நடைபெற இருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளி யிட்ட செய்திக்குறிப்பில், "மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் மார்ச் 4ம் தேதி தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு அன்றைய தினமே மேற்படி தேர்த லுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டி இருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.