உக்ரேனில் உணவின்றித் தவிப்பதாக நெல்லையைச் சேர்ந்த மாணவி தீபஸ்ரீ தெரிவித்துள்ளார். 19 வயதான அவர் அங்கு மருத்துவம் படித்து வருகிறார்.
இந்நிலையில், தீபஸ்ரீயின் பெற்றோர் நேற்று முன்தினம் அவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
அப்போது ரஷ்ய ராணுவம் குண்டு வீசுவதால் ஒரு கட்டடத்தில் பாதுகாப்பாக தங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பதற்றமாக இருப்பதாகவும் போதுமான உணவின்றித் தவிப்பதாகவும் கூறியுள்ளார்.
"வழக்கமான உணவுக்குப் பதில், பிஸ்கட் உள்ளிட்டவை மட்டுமே வழங்கப்படுகின்றன. என்னைப் போன்ற மாணவர்களை மீட்க உதவி செய்யுங்கள்," என்று அவர் தன் பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

