முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்மீது மூன்றாவது வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்மீது மூன்றாவது வழக்கு

1 mins read
ee4a96de-596d-419d-b3b6-746090e233db
-

சென்னை: ஐந்து கோடி ரூபாய் மதிப்­புள்ள தொழிற்­சா­லையை அப­க­ரித்­துக்­கொண்­ட­தாக சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் ஜெயக்­கு­மார் மீது வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக மகேஷ் என்­ப­வர் புகார் அளித்­துள்­ளார்.

ஜெயக்­கு­மா­ரின் மகள் ஜெயப்­பிரியா, மரு­ம­கன் நவீன் ஆகி­யோர் மீதும் மோசடி வழக்கு பதி­வு செய்யப்பட்டுள்­ளது.

கொலை மிரட்­டல் விடுத்­தது, அத்­து­மீறி நுழை­தல் உட்­பட ஆறு பிரி­வு­க­ளின் மீது புதிய வழக்கை எதிர்­கொண்­டுள்­ளார் ஜெயக்­கு­மார்.

திமுக பிர­மு­க­ரைத் தாக்­கிய வழக்­கில் அவ­ருக்­குப் பிணை வழங்க நீதி­மன்­றம் மறுத்­து­விட்­டது. மறி­யல் செய்த வழக்­கில் பிணை பெற்­றுள்­ளார்.

இந்­நி­லை­யில், மூன்­றா­வது வழக்­கில் அவர் மீண்­டும் கைதாகி உள்­ளார்.