ஹெலிகாப்டர் விபத்து: வானிலை காரணமாக இருக்கக்கூடும்

ஹெலிகாப்டர் விபத்து: வானிலை காரணமாக இருக்கக்கூடும்

1 mins read
4723e9f9-4847-4c0e-b1d8-847de19ad594
-

சென்னை: நாட்டின் முப்படைத் தளபதி பிபின் ராவத்தை பலி வாங்கிய ஹெலிகாப்டர் விபத்து நிகழ வானிலை காரணமாக இருக்கக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த சமயத்தில், குன்னூர் பகுதியில் காற்றின் அதிக ஈரப்பதம் காரணமாக, திடீரென மேகக்கூட்டங்கள் உருவாகி, எதிரே உள்ள பொருள்கள் தெரியாத அளவு தெளிவின்மையை ஏற்படுத்தி இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென சில விநாடிகளில் 1,400 முதல் 1,600மீட்டர் வரையிலான குறைந்த உயரத்தில் தொடர்ந்து மேகக்கூட்டங்கள் உருவாகி வந்துள்ளன. அப்போது லேசாக மழையும் பெய்துள்ளது.

எனவே, விபத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எனினும், மத்திய அரசு வட்டாரங்கள் இந்த அறிக்கை குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.