ஸ்டாலின்: ஆட்சியைப் பார்த்து பலருக்கு வயிற்றெரிச்சல்

ஸ்டாலின்: ஆட்சியைப் பார்த்து பலருக்கு வயிற்றெரிச்சல்

1 mins read
372c74f9-d70a-4de0-8129-168f13fabe10
-

சென்னை: தமி­ழின் ஆட்­சி­யாக, தமிழ் இனத்­தின் ஆட்­சி­யாக திமுக ஆட்சி இருப்­பதைப் பார்த்து பல­ருக்­கும் வயிற்­றெ­ரிச்­ச­லாக இருக்­கிறது என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

கல்வி மறுக்­கப்­பட்ட இனத்­துக்கு கல்வி கொடுத்­த­தும் பொரு­ளா­தார உரிமை பறிக்­கப்­பட்ட இனம் அனைத்­துத் துறை­க­ளி­லும் மேன்மை அடை­வ­தும் சமூ­க­ரீ­தி­யாக ஒடுக்­கப்­பட்ட மனி­தர்­கள் உயர்ந்து நிற்­ப­தும்­தான் தமிழ்ச் சமு­தா­யத்­துக்கு கடந்த நூறு ஆண்­டு­களில் திரா­விட இயக்­கம் வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய மாபெ­ரும் கொடை என்று அவர் குறிப்­பிட்­டார்.

"'திரா­விட மர­பி­னத்­தைச் சேர்ந்­த­வன்' என்று நான் சொல்­வ­தைப் பார்த்­த­வர்­க­ளுக்கு எல்­லாம் கோபம் வரு­கிறது. ஏனென்­றால், வெற்றி பெற்­ற­வன் சொல்­கி­றானே என்­ப­தால்­தான்.

"ஒரு காலத்­தில் தோற்று ஓடி­ய­வர்­க­ளைத் திரா­வி­டர்­கள் என்­றோமே, இன்று வெற்றி பெற்று நிற்­கி­றார்­களே என்­ப­து­தான் அவர்­க­ளது கோபத்­துக்கு முக்­கி­ய­மான கார­ணம்.

"திரா­விட இயக்­கத்­தின் சமூக­நீ­திக் கொள்­கையை, மாநில சுயாட்சி உரி­மையை இன்று அகில இந்­தி­யா­வும் எதி­ரொ­லிக்க தொடங்­கி­யி­ருக்­கும் காலத்­தில், தமிழ்­நாட்­டில் சிலர் திரா­விட இயக்­கத்தை வீழ்த்­து­வோம் என்று பிதற்­று­வ­தைப் புறந்­தள்­ளத்­தான் வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.