சென்னை: பேருந்து தினக் கொண்டாட்டத்தின்போது நடத்துநர் முகத்தில் கேக்கை தடவிய 30 மாணவர்கள்மீது வழக்கு பதிவானது.
நேற்று முன்தினம் பெரம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தை நிறுத்தி, அதில் ஏறிய பள்ளி மாணவர்கள் பேருந்து தினத்தைக் கொண்டாடுவதாக பயணிகளிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பேருந்து மீது பால் ஊற்றிய மாணவர்கள், பின்னர் தங்களிடம் இருந்த கேக்கை வெட்டி பேருந்து ஓட்டுநரின் முகத்தில் தடவி உள்ளனர்.
இது குறித்து நடத்துநர் அளித்த புகாரில் 30 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் கல்லூரி மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பேருந்து தினக் கொண்டாட்டம் என்று கூறி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகவும் இனி இது தொடர்பில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

