பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம்

பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம்

2 mins read
ff975da2-6aa4-4755-8068-843e7ebe53e2
-

சென்னை: அர­சி­ய­லில் வெற்றி, தோல்வி சக­ஜம். அதை ஒரு பொருட்­டாக எடுத்­துக் கொள்­ளக் கூடாது என்று பாட்­டாளி மக்­கள் கட்­சி­ நிறு­வ­னர் டாக்­டர் ராம­தாஸ் தனது கட்­சித் தொண்­டர்­க­ளுக்கு அறி­வுரை கூறி­யுள்­ளார்.

அண்­மை­யில் நடந்த உள்­ளாட்­சித் தேர்­த­லில் பாமக அவ்­வ­ளவாக சோபிக்க­வில்லை.

இந்த நிலை­யில் தைலா­பு­ரத்­தில் உள்ள தனது தோட்­டத்­தில் காஞ்சி ­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு மாவட்ட செய­லா­ளர்­க­ளு­டன் டாக்­டர்  ராம­தாஸ் ஆலோ­சனை  நடத்­தி­னார்.

அப்­போது நகர்ப்­புற, உள்­ளாட்சி தேர்­த­லில் எதிர்­பார்த்த அள­வுக்கு பாமக வேட்­பா­ளர்­கள் வெற்றி பெறா­த­தற்­கான கார­ணங்­களை அவர் கேட்­ட­றிந்­தார்.

அப்­போது வாக்­குக்­குப் பணம் அதிக அள­வில் வழங்­கப்­பட்­ட­தாக சிலர் கூறி­னர்.

இதை­ய­டுத்து நிர்­வா­கி­க­ளி­டம் பேசிய திரு ராம­ராஸ், தேர்­த­லில் வெற்றி, தோல்வி என்­பது வழக்­க­மா­னது. பெரிய பெரிய கட்­சி­கள்­கூட தேர்­த­லில் தோல்­வி­யைச் சந்­தித்­துள்­ளன என்று தெரி­வித்தார்.

"நமது வேலையை நாம் தொடர்ந்து தொய்­வில்­லா­மல் செய்ய வேண்­டும். கிரா­மம் கிரா­ம­மாக செல்­லுங்­கள், திண்­ணைப் பிர­சா­ரங்­கள் மூலம் மக்­க­ளி­டம் பேசுங்­கள்.

"இன்­னும் இரண்டு ஆண்­டு­களில் வரப்­போ­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு இப்­போதே தயா­ரா­குங்­கள்.

"தமி­ழ­கத்­தின் தென் கோடி­யில் உள்ள கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தி­லும் நமது வேட்­பா­ளர் வெற்றி பெற்­றுள்­ளார். மேற்கு மாவட்­ட­மான ஈரோட்­டி­லும் வெற்றி பெற்று இருக்­கி­றார்­கள். எந்த ஊரி­லும் பாமக கிளை இல்லை என்ற நிலை இருக்­கக்கூடாது. அனைத்து வாக்­குச் சாவ­டி­க­ளி­லும் பா.ம.க. ஏஜெண்ட் இருக்க வேண்­டும். நமது உழைப்­பின் மூலம் மக்­கள் செல்­வாக்கை பெற முடி­யும்," என்­று தொண்டர் களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.