கமல்ஹாசன் கட்சியின்
மாநில செயலாளர் விலகல்
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அந்த கட்சியின் மாநில செயலாளரும் தொழிற்சங்க பேரவை தலைவருமான பொன்னுசாமி பதவி விலகியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இவர், பெரம்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
தொழிற்சங்க பேரவை தலைவராகவும் கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தாம் விலகுவதாக நேற்று முன்தினம் தலைமைக்கு அவர் கடிதம் எழுதினார். அவரது கடிதத்தை கட்சி தலைமை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாணவிக்கு பாலியல் தொல்லை
போரூர்: சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியின் 13 வயது மகள், ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், ராமாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஓர் இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அந்த இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு வந்த மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து மயக்கம் அடைய செய்தார். பின்னர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி கடந்த சில நாள்களாக சோர்வாக இருந்தார். இது குறித்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு நால்வரையும் காவல்துறையினர் கைது ெசய்தனர்.

