மதுக்கடைகள் திறப்பை இனி மக்களே தடுக்கலாம்

மதுக்கடைகள் திறப்பை இனி மக்களே தடுக்கலாம்

1 mins read
599e32ca-e6d3-4a3b-9231-806c29045d05
-

சென்னை: மக்­கள் எதிர்ப்பு தெரி­விக்­கும் பகு­தி­களில் மதுக்­க­டை­கள் திறக்­கப்­ப­டு­வதை தடுக்­கும் வகை­யில் தமி­ழக அரசு சட்­டத்­தில் திருத்­தம் செய்­துள்­ளது. இதற்கு மது எதிர்ப்பு இயக்­கத்­தி­ன­ரும் சமூக ஆர்­வ­லர்­களும் வர­வேற்பு தெரி­வித்­துள்­ள­னர்.

புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, மதுக்­க­டை­கள் திறக்­கப்­ப­டு­வதை தடுக்­கும் அதி­கா­ரம் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மாநி­லத்­தின் எந்­த­வொரு பகு­தி­யி­லும் மதுக்­கடை திறக்­கும் முன், பொது­மக்­கள் எதிர்ப்பு தெரி­விக்­கும் பட்­சத்­தில், அது குறித்து சம்­பந்­தப்­பட்ட மாவட்ட ஆட்­சி­யர் பரி­சீ­லிக்க வேண்­டும் என சட்­டத்­தி­ருத்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஒரு­வேளை, மக்­க­ளின் எதிர்ப்பை மீறி மதுக்­கடை திறக்­கப்­பட்­டால் ஆட்­சி­ய­ரின் முடிவை எதிர்த்து, அடுத்த முப்­பது நாள்­க­ளுக்­குள் மது­வி­லக்கு ஆயத்­தீர்வை ஆணை­ய­ரி­டம் மேல் முறை­யீடு செய்­ய­லாம் என்­கிறது புதிய சட்­டத்­தி­ருத்­தம்.

பொது­வாக, பொது­மக்­கள் எதிர்ப்பு தெரி­விக்­கும் இடத்­தில் டாஸ்­மாக் மதுக்­க­டை­க­ளைத் திறக்க வேண்­டாம் என தமி­ழக அரசு அனைத்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்­கும் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. கடந்த காலங்­களில் மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் மதுக்­கூ­டங்­கள் திறக்­கப்­பட்­ட­தாக மக்­கள் மத்­தி­யில் எதிர்ப்பு நில­வி­யது. இந்­நி­லை­யில், தமி­ழக அரசு சட்ட விதி­களை மாற்றி அமைத்­துள்­ளது.