திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகை அடகுக் கடை ஒன்றில் கடந்த வெள்ளியன்று நடந்த கொள்ளைச் சம்பவத்தில் மூன்று கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று தனிப்படை காவல்துறை யினரால் தேடப்பட்டு வந்த நான்கு வட மாநிலக் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கைதான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹ்தாப் அலாம், 37, பத்ருல், 20, முகமது சுப்ஹான், 30, திலாகாஸ், 20, ஆகியோரிடம் இருந்து கிலோ கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களை நாக்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின் னர், விசாரணைக்காக திருப்பூர் அழைத்து வருகின்றனர்.
திருப்பூர், புதுராமகிருஷ்ண புரத்தைச் சோ்ந்தவா் ஜெயகுமாா், 45. இவா் திருப்பூா் யூனியன் மில் சாலையில் நகைக் கடையுடன் நகை அடகுக் கடையையும் நடத்தி வருகிறாா். இக்கடையின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்த ஜெயகுமாா், அண்மையில் தான் வீட்டைக் காலி செய்துள்ளாா்.
இதனிடையே, ஜெயகுமாா் வழக்கம்போல் வெள்ளியன்று காலையில் கடையைத் திறந்து பாா்த்தபோது மூன்று கிலோ தங்கம், ஒன்பது கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

