மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிறுமி இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் காதலர், அவரது தாய் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர், தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 14ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா, 26, என்பவருடன் பழகி, அவருடன் சென்றது தெரிந்தது. மார்ச் 3ல் சிறுமியை அவரது வீட்டில் ஹனிபாவின் தாய் மதீனா பேகம், 40, விட்டுச் சென்றார். மதுரை அரசு மருத்துவ மனையில் சிறுமி இறந்தார்.
"சிறுமி இறந்ததால் கடத்தல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி வன்கொடுமை செய்யப்படவில்லை, போதை மருந்தும் உட்கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது," என்று மதுரை எஸ்.பி. பாஸ்கரன் கூறியுள்ளார்.

