தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில்

2 mins read
533107bf-a503-4094-9b5c-ccb1ad72926e
-

சென்னை: போக்­கு­வ­ரத்து நெரி­சலைக் குறைக்­கும் வகை­யில் சென்னை விமான நிலை­யத்­துக்­கும் கிளாம்­பாக்­கம் பகு­திக்­கும் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்­கும் பணி எதிர்­வ­ரும் 2026ஆம் ஆண்­டுக்­குள் நிறை­வடை­யும் என அதி­கா­ரி­கள் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டம் மொத்­தம் ரூ.4,080 கோடி செல­வில் செயல்­ப­டுத்­தப்­படு­கிறது.

தற்­போது சென்­னை­யில் இயக்­கப்­படும் மெட்ரோ ரயில்­கள் மூலம் தின­மும் சுமார் 115,000 பேர் பயணம் செய்­கின்­ற­னர். அடுத்த சில ஆண்­டு­களில் இந்த எண்­ணிக்கை பெரு­ம­ளவு அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து விமான நிலை­யத்­தில் இருந்து கிளாம்­பாக்­கம் புற­ந­கர் பேருந்து நிலை­யம் வரை புதிய மெட்ரோ ரயில் பாதையை அமைக்க மத்­திய, மாநில அர­சு­கள் முடிவு செய்­துள்­ளன.

இதற்­கான விரி­வான திட்ட அறிக்கை தமி­ழக அர­சி­டம் அளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், 15.3 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்­கப்­பட உள்­ளது.

"விமான நிலை­யம், கிளாம்­பாக்­கம் இடையே 12 ரயில் நிலை­யங்­கள் அமைக்­கப்­பட உள்­ளன.

"பல்­லா­வ­ரம், கோதண்­டம் நகர், குரோம்­பேட்டை, மகா­லட்­சுமி காலனி, திரு.வி.க.நகர், தாம்­பரம், இரும்­பு­லி­யூர், பீர்க்­கங்­க­ரணை, பெருங்­க­ளத்­தூர், வண்­ட­லூர், அண்ணா உயி­ரி­யல் பூங்கா, கிளாம்­பாக்­கம் பஸ் நிலை­யம் ஆகிய இடங்­களில் மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

"இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் தமி­ழ­கத்­தின் தென் மாவட்ட மக்­கள் சென்னைக்கு வருவதும் சென்­னை­யில் உள்­ள­வர்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குச் செல்­வ­தும் எளி­தா­கும்.

"போக்­கு­வ­ரத்து நெரி­சல் இருக்­காது என்­ப­தால் நேரத்தை மிச்­சப்­ப­டுத்த முடி­யும்," என மெட்ரோ ரயில் நிறு­வன அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்­கும் பணி­கள் விரை­வில் தொடங்க உள்­ளன. இது 15.3 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு உயர்த்­தப்­பட்ட பாதை­யாக இருக்­கும் என்­றும் அவர்­கள் கூறி­உள்­ள­னர்.