'சட்டம் ஒழுங்கு சீர்குலைவை இரும்புக் கரத்தால் நசுக்குவோம்'

'சட்டம் ஒழுங்கு சீர்குலைவை இரும்புக் கரத்தால் நசுக்குவோம்'

1 mins read
5e95635d-9f2f-4bcb-a559-23997488bc78
-

சென்னை: மாவட்ட ஆட்­சி­யர்­கள், காவல்­துறை, வனத்­துறை அதி­கா­ரி­கள் பங்­கேற்­கும் மூன்று நாள் மாநாடு சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நேற்று தொடங்­கி­யது.

இம்­மா­நாட்­டில் பேசிய முதல்வர், "சட்­டம் ஒழுங்கு விவ­கா­ரத்­தில் ஒரு­போ­தும் சம­ர­சம் செய்­து­கொள்ள மாட்­டேன்.

"கட்­டப்­பஞ்­சா­யத்து, நில அப­க­ரிப்­பில் ஈடு­ப­டு­ப­வர்­கள் யாராக இருந்­தா­லும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

"மாநி­லத்­தில் சட்­டம் ஒழுங்­கிற்கு குந்­த­கம் விளை­விக்­கும் சக்­தி­களை இரும்­புக் கரம் கொண்டு அடக்க வேண்­டும். சட்­டம், ஒழுங்கு சீராக இருப்­பதை கண்­கா­ணிக்க வேண்­டும். பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்களை­யும் அனு­ம­திக்­கக் கூடாது," என அறி­வு­றுத்­தி­னார்.

தொடர்ந்து பேசிய அவர், மாவட்ட ஆட்­சி­யர்­கள் அனை­வ­ரும் மாண­வர்­கள், இளை­ஞர்­க­ளுக்கு வழி­காட்­டி­யா­கத் திக­ழ­வேண்­டும் எனத் தெரி­வித்தவர், அனை­வ­ரும் நேர்­மை­யாக ஒளி­வு­ம­றை­வின்றி வெளிப்­ப­டைத் தன்­மை­யோடு, முழு அர்ப்­ப­ணிப்­போடு செயல்­பட வேண்­டும் எனவும் சொன்னார்.

மத நல்­லி­ணக்­கத்­திற்கு எதி­ராக யார் செயல்­பட்­டா­லும் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்.

சாலை விபத்­து­கள் அதி­கம் நடை­பெ­றும் மாநி­லங்­களில் ஒன்­றாக தமிழ்­நாடு இருப்­பது வருத்­தம் அளிக்­கிறது. அத­னால், சாலை விபத்­து­களைக் குறைக்க தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது என்றார்.