வேலூர்: வேலூர் அருகேயுள்ள கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி, ஆறு மாதங்களுக்கு முன்பு சத்துவாச்சாரியிலிருக்கும் தனியார் மருத்துவ
மனையில் ஆண் குழந்தை ஈன்றெடுத்தார். ஆனால், பிரசவித்த சில மணி நேரங்களிலேயே அப்பெண் இறந்துவிட்டார். இதனால், தாய்ப்பாலும் தாய்ப்பாசமும் கிடைக்காமல் தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்கிறது.
தமது மனைவி இறந்துவிட்டதையும் குழந்தை தாய்ப்பாலின்றி வளர்வதையும் கால்நடை மருத்துவர் ரவிசங்கரிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார் விவசாயி. இது குறித்து மருத்துவர், தம் மனைவி சந்தியாவிடம் கூறியிருக்கிறார். கவலையுற்ற சந்தியா, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட விரும்புவதாக கணவரிடம் தெரிவித்தார்.
அவரும் அதை வரவேற்று ஊக்குவிக்க, கடந்த 3 மாதங்களாக வாரம் ஒருமுறை, தங்களது வீடு அமைந்திருக்கும் காட்பாடியிலி ருந்து சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து கீழ் அரசம்பட்டு கிராமத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டி வருகிறார் சந்தியா.