மாணவர்களுடன் பேருந்துப் படியில் பயணம் செய்த எம்எல்ஏ

மாணவர்களுடன் பேருந்துப் படியில் பயணம் செய்த எம்எல்ஏ

1 mins read
94c6b948-c529-4e4e-bd4d-044312fc2e3f
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்.படம்: தமிழக தகவல் ஊடகம் -

திரு­வள்­ளூர்: பேருந்­தில் கூட்ட நெரி­சல் அதி­க­மாக இருந்­ததை அடுத்து திரு­வள்­ளூர் சட்­ட­ப்பேரவை உறுப்­பி­னர் வி.ஜி.ராஜேந்­தி­ரன், பேருந்துப் படி­யில் தொங்­கி­ய­படி பய­ணம் மேற்­கொண்­டார்.

நேற்று முன்­தி­னம் திரு­வள்­ளூ­ரில் உள்ள பூண்டி பகு­தி­யில் நடை­பெற்ற அரசு விழா­வில் பங்­கேற்ற அவர், பின்­னர் அரு­கில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் ஆய்வு மேற்­கொண்­டார்.

அப்­போது அங்­கி­ருந்த பேருந்து நிறுத்­தத்­தில் நிறைய மாண­வர்­கள் பேருந்­துக்­காகக் காத்­தி­ருந்­த­னர். சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ரைக் கண்­ட­தும், அம்­மா­ண­வர்­கள் பள்ளி நேரத்­தில் கூடு­தல் பேருந்­து­களை இயக்க வேண்­டும் என கோரிக்கை விடுத்­த­னர்.

போது­மான பேருந்­து­கள் இல்­லாத கார­ணத்­தால், பல மாண­வர்­கள் படி­யில் தொங்­கி­ய­படி உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் பய­ணம் செய்­வ­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

அப்­போது அவ்­வ­ழியே செல்­லும் பேருந்து ஒன்று வர, மாண­வர்­க­ளு­டன் சேர்ந்து எம்­எல்ஏ ராஜேந்­தி­ர­னும் அதில் ஏற முற்­பட்­டார்.

எனி­னும் கூட்­டம் அதி­க­மாக இருந்­த­தால், அவர் மாண­வர்­க­ளு­டன் பேருந்துப் படி­யில் தொங்­கி­ய­ப­டியே பய­ணம் செய்­தார்.

இதையடுத்து திமுக நிர்­வா­கி­களும் அவ­ரு­டன் பேருந்­தில் சென்­ற­னர். அதன் பின்­னர் மாண­வர்­க­ளின் கோரிக்கை குறித்து பரி­சீ­லித்து மிக விரைவில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.