தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோயாளிகளை ஐந்து கி.மீ தூக்கிச் செல்லும் அவலம்

1 mins read
1ee692a9-3c0d-4249-8072-6568043dd6c2
தொட்டிலில் தூக்கிச் செல்லப்படும் நோயாளி. படம்: ஊடகம் -

திருப்­பூர்: சாலை வசதி இல்­லாத கார­ணத்­தால் உயி­ருக்­குப் போரா­டும் நோயா­ளி­களை ஐந்து கிலோ மீட்­டர் தூரம் தொட்­டில் கட்டி தூக்­கிச் செல்­லும் அவ­ல­நிலை ஈசல்­திட்டு என்ற மலைக்­கி­ரா­மத்­தில் நிலவி வரு­கிறது.

திருப்­பூர் மாவட்­டத்­தில் உள்ள கொங்­கு­ரார்­குட்டை மலை­ய­டி­வா­ரத்­தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்­டர் தூரத்­தில் செங்­குத்­தான மலை­யில் அமைந்­துள்­ளது ஈசல்­திட்டு மலைக்­கி­ரா­மம்.

அக்­கி­ரா­மத்­துக்­குச் செல்ல சாலை வசதி இல்லை. கரடு முர­டாக உள்ள பாதை­யைத்­தான் அங்கு வசிக்­கும் 250 பேர் பல ஆண்­டு­க­ளா­கப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

யாருக்­கா­வது உடல்­ந­லம் பாதித்­தால் மலைப்­பா­தை­யில் ஐந்து கிலோ மீட்­டர் தூரத்­துக்கு நடந்து செல்ல வேண்­டும். நடக்க முடி­யாத நிலை­யில் இருப்­ப­வர்­க­ளைத் தொட்­டில் கட்டி, அதில் படுக்க வைத்து கீழே தூக்­கிச் செல்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், ஈசல்­திட்டு கிரா­மத்­தில் வசிக்­கும் 54 வயதான மாயம்மா­ளுக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, அவரையும் தொட்­டில் கட்டி படுக்­க­வைத்து, ஐந்து கிலோ மீட்­டர் தூரம் சுமந்து வந்து ஜல்­லி­பட்டி அரசு மருத்­து­வ­மனை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­தித்­த­னர்.

சமூக ஊட­கங்­க­ளின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்ள நிலை­யில், மாயம்­மாள் இவ்­வாறு தொட்­டி­லில் தூக்­கி­வ­ரப்­பட்ட சம்­ப­வம் குறித்து பொது­மக்­களில் ஒரு­வர் சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டதை அடுத்து, ஊட­கங்­க­ளின் பார்வை ஈசல்­திட்டு கிரா­மம் பக்­கம் திரும்­பி­யுள்­ளது.