திருநெல்வேலி: விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி நெகிழி பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பலரிடமும் பேசுபொருளாகி உள்ளது.
"முதல்வர் வழியில் விஜய் செல்கிறாரா? அல்லது முதல் வருக்குப் போட்டியாகச் செயல்படுகிறாரா?" என்ற கேள்வியைக் கிளப்பிவிட்டுள்ளது.
"பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதால், அதற்கு மாற்றான பொருள்களைப் பயன்படுத்தவேண்டும்," என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, 14 பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து, நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழக அரசு 'மீண்டும் மஞ்சள் பை' இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பல்வேறு சமூகப்பணிகளையும் செய்து வரும் விஜய் ரசிகர்களும் துணிப்பைகளை பிரபலப்படுத்தும் பணியில் ஆர்வம் காட்டி உள்ளனர்.
நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் இருந்த நெகிழிப் பைகளைப் பெற்றுக்கொண்டு, அவர் களிடம் மஞ்சள் பைகளை வழங்கி நெகிழிப் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் மஞ்சள் நிற பைகளைப் பிரசாரத்தின்போது பயன்படுத்திய நிலையில், இப்ேபாது விஜய் ரசிகர்களும் மஞ்சள் நிற பைகளை விநியோகம் செய்திருப்பது புது யூகத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.

