'பொய்வழக்குப் போடுவதால் அதிமுகவை அழிக்கமுடியாது'

'பொய்வழக்குப் போடுவதால் அதிமுகவை அழிக்கமுடியாது'

1 mins read
1091f875-6f1e-4505-965b-b99041761a05
-

திருச்சி: நிபந்­தனை பிணை­யில் விடு­த­லை­யாகி உள்ள அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் திருச்சி கண்­டோன்­மெண்ட் காவல் நிலை­யத்­தில் முன்­னி­லை­யாகி நேற்று கையெ­ழுத்­திட்­டார்.

பொய்­வ­ழக்­குப் போட்டு அதி­முகவை அழித்­து­வி­ட­லாம் என நினைப்பது சாத்­தி­ய­மில்லாதது என­வும் ஜெயக்­கு­மார் தெரி­வித்­தார்.

திமுக பிர­மு­க­ரைத் தாக்­கி­யது, விதி­களை மீறி போராட்­டம் நடத்தி யது, நில அப­க­ரிப்பு ஆகிய வழக்­கு­களில் சிறை­யில் அடைக்­கப்பட்ட ஜெயக்­கு­மார், திருச்சி காவல்­நிலை யத்­தில் கையொப்­ப­மிட்­டார்.

இதைத்­தொ­டர்ந்து செய்தி யாளர்­க­ளி­டம் பேசிய ஜெயக்­கு­மார், திமுக அரசு மக்­கள் பணி­யில் கவ­னம் செலுத்­தா­மல் அதி­மு­கவை அழிப்­பது பற்­றியே சிந்­தனை செய்து கொண்டு இருப்பதாகக் குற்­றம்­சாட்டினார். "அதி­மு­கவை ஸ்டா­லி­னால் ஒன்­றும் செய்­ய­மு­டி­யாது. அதிமுகவை அழித்­து­வி­ட­லாம் என நினைப்­பது பூனை பகல் கனவு காண்பது போல்­தான் இருக்­கும்," எனக் கூறி­னார்.