தாய்மாமன் சிலை மடியில் சிறப்பாக நடந்தேறிய காதணி விழா

தாய்மாமன் சிலை மடியில் சிறப்பாக நடந்தேறிய காதணி விழா

1 mins read
a3172b71-b364-4b74-89b8-ec0c7a5ac626
புன்னகையுடன் இருக்கும் தாய்மாமனின் மெழுகுச் சிலை மடியில் அடுத்தடுத்து குழந்தைகளை அமரவைத்து ெமாட்டை அடித்து, காதணி விழா நடந்தேறியது. தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவான தாய்மாமனே நேரில் வந்து வாழ்த்தியது போல் தாங்கள் உணர்ந்ததாக குடும்பத்தினர் மகிழ்ந்தனர். படம்: ஊடகம் -

ஒட்­டன்­சத்­தி­ரம்: ஒட்­டன்­சத்­தி­ரத்­தில் தனது தாய்­மா­மன் உரு­வச் சிலை­யின் மடி­யில் அமர்ந்து இரு குழந்தைகள் மொட்டை அடித்து, காது குத்திக்கொண்டனர். ­

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு விபத்து ஒன்­றில் உயி­ரி­ழந்த தனது சகோ­த­ர­னின் ஆசையை நிறைவேற்ற இந்தக் காதணி விழாவுக்கு பிரி­ய­தர்­ஷினி என்­ப­வர் ஏற்பாடு செய்திருந்தார்.

திண்­டுக்­கல் மாவட்­டம், ஒட்­டன்­சத்­தி­ரம் பகு­தி­யைச் சேர்ந்தவர் பாண்­டித்­துரை. இவர் மீது அதிக பாசம் கொண்­டி­ருந்த அவ­ரது சகோ­தரி பிரி­ய­தர்­ஷினி, தனது இரண்டு பிள்­ளை­க­ளுக்­கும் தாய்­மா­மன் பாண்­டித்­துரை மடி­யில் வைத்து காது குத்த ஆசைப்­பட்­டார்.

இதை­ய­டுத்து, பாண்டித்துரை யைப் போலவே தத்­ரூ­ப­மாக சிரித்த முகத்­து­டன் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த மெழு­குச் சிலையை வைத்து, தாய்­மா­மன் உறவுக்கான செய்­மு­றை­களைச் செய்து, அவ­ரது மடி­யில் வைத்து தனது மகள் தாரி­காஸ்ரீ, மகன் மோனேஷ் கும­ரன் ஆகி­யோருக்கு ெமாட்டை அடித்து, காதணி விழா நடத்­தி­னார்.

இது­தொ­டர்­பாக பாண்­டித்­து­ரை­யின் தாய் பசுங்­கிளி கூறியபோது, "அக்­கா­வின் குழந்­தை­களை தனது மடி­யில் அமரவைத்து காதணி விழா நடத்தவேண்டும் என்­பது பாண்­டித்­து­ரை­யின் நீண்ட நாள் கனவு. எனவே, ரூ.5 லட்­சம் செல­வில் அவனது சிலையைச் செய்து குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தி எனது மக­னின் ஆசையை குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறை­வேற்­றி உள்ளோம்," என நெகிழ்ச்­சி­யு­டன் கூறினார்.