ஈரோடு மாவட்டத்தில் உள்ள நேதாஜி தினசரி சந்தையில், குத்தகைதாரர் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சிலர் காய்கறி மாலை அணிந்தும் தலையில் காய்கறி மூட்டைகளைச் சுமந்தும் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தற்போது மீண்டும் பழையபடி சுங்கக் கட்டண ரசீது கொடுக்காமல் குத்தகைதாரர் அதிக பணம் வசூலிப்பதாகவும் இதனால் விவசாயிகளும் சிறு வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மனுவில் தெரிவித்து உள்ளனர். படம்: தமிழக ஊடகம்
காய்கறி மாலை அணிந்து வந்து மனு அளித்த வியாபாரிகள்
1 mins read
-

