பிணையில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்

பிணையில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்

1 mins read
bb7ec46b-4a07-42ca-bcc9-77ef70f631f3
-

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் தமது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

சிறைவிடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்தவித குற்றச்சாட்டும் பதிவாகவில்லை என்பதை அவரது தரப்பு உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

அவரது மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், பிணையில் விடுவிக்கலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தன் மகனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்த தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.