மீண்டும் களமிறங்கிய தினகரன்: கர்நாடகாவை கண்டித்து திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

மீண்டும் களமிறங்கிய தினகரன்: கர்நாடகாவை கண்டித்து திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

1 mins read
2383b4b7-c4af-48ff-bb77-bf813a9074bc
-

திருச்சி: மேக­தா­து­வில் புதிய அணை கட்ட கர்­நா­ட­கா­வுக்கு மத்திய அரசு அனு­மதி அளிக்­கக்­கூ­டாது என அம­முக வலி­யு­றுத்தி உள்­ளது.

கர்­நா­டக அர­சைக் கண்­டித்து அக்­கட்சி சார்­பில் நேற்று திருச்­சி­யில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. இதில் அக்­கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன் பங்­கேற்­றார். மேலும், விவ­சாய சங்­கங்­களும் அம­மு­க­வு­டன் இணைந்து போராட்­டத்தை நடத்­தின.

அப்­போது பேசிய தின­க­ரன், மேக­தா­து­வில் அணை கட்ட அனு­ம­திக்­கப்­பட்­டால், தமி­ழ­கம் சோமா­லியா நாட்­டைப் போல் வறட்­சி­யா­கி­வி­டும் என்­றார். தமி­ழ­கத்­தில் நிலத்­தடி நீர் வற்றி வரு­வ­தா­க­வும் நீர்­மட்­டத்தை உயர்த்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார். தமி­ழக மக்­களை மத்­திய அரசு வஞ்­சிக்­கக்­கூ­டாது என்­றார் அவர்.

இந்நிலை­யில், போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­ய­தாக தின­க­ரன், விவ­சாய சங்­கத் தலை­வர் அய்­யாக்­கண்ணு உள்­ளிட்ட 1,200 பேர் மீது திருச்சி காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

உள்­ளாட்­சித் தேர்­த­லின்­போது அம­மு­க­வுக்­காக தின­க­ரன் பெரிய அள­வில் பிர­சா­ரம் மேற்­கொள்­ள­வில்லை. மேலும், சில விவ­கா­ரங்­கள் தொடர்­பாக அறிக்­கை­களை மட்­டும் வெளி­யிட்டு வந்­தார். அவர் தீவிர அர­சி­யலில் ஈடு­பட்­டுள்­ளாரா என்ற சந்­தே­கம் எழுந்­துள்ள நிலை­யில், திடீ­ரென இந்­தப் போராட்­டத்­தில் பங்­கேற்­றுள்­ளார்.