தமிழகத்தில் கொரோனா நான்காவது அலையை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்து

தமிழகத்தில் கொரோனா நான்காவது அலையை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்து

1 mins read
84b339ba-5d30-4e7d-9c25-b051091cd620
-

திருவண்ணாமலை: தமி­ழ­கத்­தில் கொரோனா நான்­கா­வது அலை ஏற்­பட வாய்ப்­புள்­ள­தாக நிபு­ணர்கள் கூறி­யுள்­ள­தால் அனை­வ­ரும் எச்­சரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

திரு­வண்­ணா­ம­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய, தமி­ழ­கத்­தில் தொற்­றுப் பர­வல் வெகு­வா­கக் கட்­டுக்­குள் வந்­துள்ள போதி­லும், அடுத்த ஓரிரு மாதங்­க­ளுக்கு பொது­மக்­கள் முன்­னெச்­ச­ரிக்கையுடன் செயல்­பட வேண்­டும் என வலியுறுத்­தி­னார்.

"எதிர்­வ­ரும் ஜூன் மாதம் கொரோனா நான்­கா­வது அலை வர வாய்ப்­புள்­ளது என கான்­பூர் ஐஐடி மையம் தெரி­வித்­துள்­ளது. சீனா, சிங்­கப்­பூர், மலே­சியா, நமது அண்டை மாநி­ல­மான கேர­ளா­வில் கொரோனா பாதிப்பு அதி­க­மாக உள்­ளது என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

"எனவே ஓரிரு மாதங்­க­ளுக்கு பொது­மக்­கள் முகக்­க­வ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது ஆகி­ய­வற்றை பொறுப்­பு­டன் பின்­பற்ற வேண்­டும்," என அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

சிங்­கப்­பூர், மலே­சியா, கேர­ளா­வுக்கு பலர் பய­ணம் மேற்­கொண்டு நாடு திரும்­பு­வ­தால் தொற்­றுப் பர­வ­லுக்கு வாய்ப்­புள்­ளது என்­பதை மறை­மு­க­மா­கக் குறிப்­பிட்டே அமைச்­சர் இவ்­வாறு அறி­வு­றுத்­தி­ய­தா­கத் தெரி­கிறது.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 86 பேருக்கு கொரோனா கிருமி தொற்றி­ உள்­ளது. மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 1,054 ஆகக் குறைந்­துள்­ளது. 14 மாவட்­டங்­களில் புதி­தாக யாருக்­கும் கிருமி தொற்­ற­வில்லை.

ஒரு­வர் மட்­டும் உயி­ரி­ழந்­து­விட்­டார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.