தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொத்துக்குவிப்பு: வேலுமணி மீது மேலும் ஒரு வழக்கு

2 mins read
bb846e1a-675e-40ed-9673-80a58edd8966
-

ரூ.58.23 கோடி சேர்த்ததாகப் புகார்; 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு சோதனை

கோவை: வரு­மா­னத்­திற்கு அதிக­மாக சொத்து சேர்த்­துள்­ள­தாக அதி­முக முன்­னாளா் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி (படம்) மீது தமி­ழக காவல்­து­றை­யின் லஞ்ச ஒழிப்­புப் பிரிவு வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது. இது அவர் மீது பதி­வா­கும் இரண்­டா­வது வழக்­கா­கும்.

தனது வரு­மா­னத்­துக்கும் அதி­க­மாக ரூ.58.23 கோடி குவித்­துள்­ள­தாக அவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து வேலு­ம­ணிக்குச் சொந்­த­மான, அவ­ரு­டன் தொடர்­பு­டைய இடங்­களில் நேற்று காலை காவல்­துறை அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

நேற்று காலை கோவை­யில் உள்ள எஸ்.பி.வேலு­மணி வீட்டிற்கு அதி­காலை வேளை­யில் வந்த லஞ்ச ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள், உட­ன­டி­யாக சோதனை நடத்­தி­னர். அதே­வே­ளை­யில், அவ­ரது உதவி­யா­ளர் சந்­தோஷ், கோவை சிங்­கா­நல்­லூர் எம்­எல்ஏ ஜெய­ராம­னின் வீடு­க­ளி­லும் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

கோவை, சேலம், கிருஷ்­ண­கிரி உள்­ளிட்ட ஆறு மாவட்­டங்­களில் எஸ்.பி.வேலு­ம­ணி­யு­டன் நெருங்­கிய தொடர்­பில் உள்­ள­வர்­க­ளின் வீடு, அலு­வ­ல­கங்­கள் என மொத்­தம் 58 இடங்­களில் ஒரே நேரத்­தில் சோதனை நடத்­தப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்­னை­யில் மட்­டும் பத்து இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்ட நிலை­யில், அவ­ரது சகோ­த­ரர் அன்­ப­ர­சன், அவ­ரது மனைவி ஹேம­லதா உள்­ளிட்ட 13 பேர் மீது வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர். மேலும், வேலு­ம­ணி­யு­டன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்­த­தாக 6 நிறு­வ­னங்­கள் மீதும் வழக்கு பதிவு செய்­துள்­ள­னர்.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் 2016 முதல் 2021 வரை நக­ராட்சி நிர்­வா­கம், ஊரக வளர்ச்சி,சிறப்பு திட்­டங்­கள் செய­லாக்­கத்­து­றை­யின் அமைச்­ச­ரா­கப் பொறுப்பு வகித்­தார் எஸ்.பி.வேலு­மணி.

அப்­போது அவர் வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக எழுந்த புகா­ரின் பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அவர் மீது வழக்­குப் பதி­வா­னது. அப்­போது 60 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்டு பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள், ரூ.13 லட்­சம் ரொக்­கப் பணம், நிலப்­ப­திவு தொடர்­பான பத்­தி­ரங்­கள், தனி­யார் நிறு­வ­னங்­க­ளு­ட­னான பரி­வர்த்­தனை தொடர்­பான ஆவ­ணங்­கள் ஆகி­ய­வற்­றைப் பறி­மு­தல் செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், நேற்று மீண்­டும் வேலு­ம­ணி­யின் வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­டுள்­ளது. இம்­முறை அவர் தமது பத­விக்­கா­லத்­தின்­போது வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்­துள்­ள­தாக வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

இதற்­கி­டையே திருப்­பத்­தூ­ரில் உள்ள நகைக்­கடை ஒன்­றி­லும் நேற்று காவல்­து­றை­யி­னர் சோதனை மேற்­கொண்­ட­னர். அது வேலு­ம­ணி­யின் உற­வி­ன­ருக்­குச் சொந்­த­மான கடை எனக் கூறப்­ப­டு­கிறது.