தமிழகத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் பொது மக்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும் வகை­யில் மிகப்­பெ­ரிய புத்­த­கப் பூங்கா அமைக்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அனைத்து நூல்­களும் ஒரே இடத்­தில் கிடைப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் அந்­தப் பூங்கா அமை­யும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

தமிழ் மொழி, இலக்­கிய வளர்ச்சி, சமு­தாய உயர்­வுக்கு தொண்­டாற்­றிய தமி­ழ­றி­ஞர்­க­ளுக்கு தமி­ழக அர­சின் விரு­து­கள் வழங்­கும் விழா சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. இதில் பங்கேற்று விரு­து­களை வழங்­கி­ய­போதே முதல்­வர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

மேலும், தமிழ் அறி­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­படும் விரு­து­க­ளுக்­கான பரி­சுத்­தொகை உயர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

"தமிழ் இனம் சுமார் 3,500 ஆண்­டு­கள் பழமை வாய்ந்­தது. தமி­ழின் பெரு­மையை எடுத்­துச் சொல்­லும் அனைத்து நூல்­களும் ஒரே இடத்­தில் கிடைக்­கும் நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக மாபெ­ரும் புத்­த­கப் பூங்­காவை அமைக்க அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

"இந்த புத்­த­கப் பூங்கா உரு­வா­னால், அனைத்­துப் பதிப்­பா­ளர்­கள், விற்­ப­னை­யா­ளர்­களை ஒரே இடத்­தில் சந்­திக்­கும் சூழல் உரு­வா­கும்," என்­றார் முதல்­வர் மு.க. ஸ்டா­லின்.

தமி­ழக அர­சுப் பணி­க­ளுக்கு தமிழ் மொழி கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், ஆல­யங்­களில் தமி­ழில் அர்ச்­சனை செய்­ய­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!