ரூ.84 லட்சம் ரொக்கம்; 11.15 கிலோ தங்கம் பறிமுதல்

ரூ.84 லட்சம் ரொக்கம்; 11.15 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read
cc5ac6bf-0a74-4c23-b49b-f2c13c585b96
-

கோவை: அதி­முக முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­ம­ணி­யின் வீடு, அவ­ரு­டன் தொடர்­புள்ள இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது கணக்­கில் வராத 84 லட்­சம் ரொக்­கப் பணம், 11.15 கிலோ தங்­கம், 118 கிலோ வெள்ளி ஆகி­யவை பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை தெரி­வித்­துள்­ளது.

மின்­னி­லக்­கப் பணம் (கிரிப்டோ கரன்சி) தொடர்­பாக அவர் ரூ.34 லட்­சம் முத­லீடு செய்­துள்­ள­தா­க­வும் அது தொடர்­பான ஆவ­ணங்­கள் கிடைத்­துள்­ளது என்­றும் அதி­காரி­கள் கூறி­னர்.

கைபே­சி­கள், மடிக்­க­ணி­னி­கள், கணினி வன்­பொ­ருள்­கள் உள்­ளிட்டவை பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை தெரி­வித்­துள்ள நிலை­யில், தம் வீட்­டில் இருந்து எந்­தப் பொரு­ளை­யும் லஞ்ச ஒழிப்­பு­து­றை­யி­னர் கைப்­பற்­ற­வில்லை என வேலு­மணி கூறி­யுள்­ளார். சோதனை நட­வ­டிக்­கைக்­குப் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அதி­கா­ரி­கள் ஒரு ரூபாயைக் கூட பறி­மு­தல் செய்­ய­வில்லை என்றும் நகை­களும் ரொக்­கப் பணமும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக தவ­றான தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ள­னர் என்­றும் சாடி­னார்.

"முதல்­வர் ஸ்டா­லின், திமுக அர­சின் தூண்­டு­த­லின் பேரில் என் வீடு உட்­பட பல்­வேறு இடங்­களில் சோதனை நடத்தி உள்­ள­னர். இந்­தச் சோதனை அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக நடை­பெற்­றுள்­ளது.

"வேண்­டு­மென்றே திட்­ட­மிட்டு பழி­வாங்­கும் நோக்­கத்­து­டன் இது­போன்று செயல்­ப­டு­கி­றார்­கள். கோவை மாவட்­டத்­தில் அதி­முக பத்து சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­களி­லும் வெற்றி பெற்­றது. இதன் கார­ண­மாக திமுக அரசு வேண்­டு­மென்றே லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­களை ஏவி விட்­டுள்­ளது," என்­றார் எஸ்.பி.வேலு­மணி.