ஏறக்குறைய 150 நாடுகள் பங்கேற்கும் இந்தியாவின் ஆகப்பெரிய விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது.
சென்னை: உலகம் முழுவதும் இருந்து பல நாடுகள் பங்கேற்கும் அனைத்துலக சதுரங்கக் கூட்டு அமைப்பின் 44வது 'செஸ்' ஒலிம் பியாட்' போட்டி சென்னையில் பிர பல சுற்றுலாத் தளமான மாமல்ல புரத்தில் நடைபெறுகிறது.
இதில் 150 நாடுகளைச் ேசர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் நடைெபறும் ஆகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக இது இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 2022ஆம் ஆண்டின் அனைத்துலக சதுரங்கப் போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழக அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
போர் சூழ்நிலை காரணமாக 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டியை ரஷ்யாவில் நடத்த முடியவில்லை. இந்த நிலையில் இந்தப் போட்டியை நடத்த பல நாடுகள் முன் வந்தன.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியுடன் தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகளும் அகில இந்திய செஸ் கூட்டமைப்புக் குழுவும் இணைந்து செயல்பட்டு இந்த நிகழ்வு சென்னையில் நடத்துவதற்கான வாய்ப்பு கைப் பற்றப்பட்டுள்ளது.
பத்து நாட்களுக்குள் ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, முதல்வர் அலுவலகத்தை அணுகிய சில மணி நேரங்களில் அனைத்து ஒப்புதல்களையும் தமிழக அரசு வழங்கியது.
தமிழக அரசு, சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத் மற்றும் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்திற்குக் கிடைத்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில், "செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி யை ஏற்று நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

